8 தோட்டாக்கள்

குற்ற பின்னணி மற்றும் திகிலுடன், ‘8 தோட்டாக்கள்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.;

Update:2017-04-01 13:21 IST
திகிலுடன் தயாரான ‘8 தோட்டாக்கள்’

 புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்க, அபர்ணா பாலமுரளி என்ற மலையாள நடிகை கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, டி.சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், ஸ்ரீகணேஷ். வெள்ளைப்பாண்டியன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படத்தை சக்திவேலன் வெளியிடுகிறார்.

போலீஸ் பின்னணியில், முழுக்க முழுக்க சென்னையில் தயாராகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்