தொண்டன்

‘அப்பா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சமுத்திரக்கனி நடித்து டைரக்டு செய்திருக்கும் படம், ‘தொண்டன்.’

Update: 2017-04-15 08:15 GMT
‘தொண்டன்,’ அரசியல் படம் அல்ல சமுத்திரக்கனி சொல்கிறார்

இந்த படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“தொண்டன், அரசியல் படம் அல்ல. அரசியல் சார்ந்த படமும் அல்ல. ஒரே ஒரு இடத்தில்தான் அரசியல் பற்றிய காட்சி இடம் பெறும். இது, ஈரோட்டில் நடந்த ஒரு சம்பவத்தை கருவாக கொண்ட படம். ஒரு கல்லூரி மாணவியை ஒருவன் அடித்து கொன்ற அந்த சம்பவம் என்னை பாதித்தது. அப்படி தாக்க வரும்போது, அதை யாராவது தடுத்திருந்தால்...? என்ற கற்பனையில் கதை உருவானது.

இதில், நான் ஆம்புலன்ஸ் டிரைவராகவும், விக்ராந்த் ஆம்புலன்ஸ் அட்டண்டராகவும் நடித்து இருக்கிறோம். சுனைனா, ஆசிரியையாக நடித்துள்ளார். கனமான கதை என்றாலும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சூரி, தம்பிராமய்யா, கஞ்சா கருப்பு ஆகியோருடன் ஞானசம்பந்தம், வேலராமமூர்த்தி, நமோ நாராயணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பல படங்களை வினியோகம் செய்த ஆர்.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நெய்வேலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, 38 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம். மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.”

மேலும் செய்திகள்