குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
காதல்-நகைச்சுவையுடன் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்;
டைரக்டர் சீனுராமசாமியிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர், தயானந்தன் பி.எம். இவர், ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். இது காதலும், நகைச் சுவையும் கலந்த படம். படத்தை பற்றி டைரக்டர் தயானந்தன் கூறியதாவது:-
“இந்த சமுதாயத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் கதாநாயகன் குமரனுக்கு சமுதாயத்தின் மூலம் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதன் மூலம் தொடரும் பிரச்சினைகளை அவன் எப்படி சமாளித்து தனது காதலிலும் வெற்றி பெறுகிறான்? என்பதே கதை.
இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்க, கதாநாயகியாக ரியாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ஆர்.என்.ஆர்.மனோகர், ஷகிலா, ‘வெண்ணிலா கபடிக்குழு’ ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள். பாக்யராஜ், கானா பாலா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள்.
சங்கர் ராம் இசையமைக்க, பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”
முருகனின் அறுபடை வீடுகளில் ‘குன்றத்திலே குமரனுக்குகொண்டாட்டம்’
வாழ்க்கையில் லட்சியமே இல்லாத ஒரு இளைஞன், மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான். அதில் இருந்து அவன் எப்படி விடுபடுகிறான்? என்பதை கருவாக வைத்து, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படம் தயாராகிவருகிறது.
இதில், பிரஜன்-ரியாமிக்கா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக் கிறார்கள்.
பிரஜன், ரியல் எஸ்டேட் தரகராகவும், ரியாமிக்கா பள்ளி ஆசிரியையாகவும் வருகிறார்கள். இமான் அண்ணாச்சி, ஷாகிலா, ‘வெண்ணிலா கபடிக்குழு’ ஜானகி, ஷர்மிளா, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடிக்கிறார். சங்கர்ராம் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகம் ஆகிறார். தயானந்தன் பம. டைரக்டு செய்கிறார். வார் வின் புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் படம் வளர்ந்து இருக்கிறது.