‘அமைதிப்படை-2,’ ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். இது, பெண் போலீசாரின் பிரச்சினைகளை நுணுக்கமாக சொல்லும் படம். இதில் பெண் போலீசாக நடித்திருப்பவர், பிரியங்கா.
இவருடன், ‘கோரிப்பாளையம்’ படத்தில் நடித்த ஹரீஷ், ஈ.ராமதாஸ், ‘வழக்கு எண்’ முத்துராமன், சக்தி சரவணன், வீ.கே.சுந்தர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ‘நாம் தமிழர்’ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
கதை-வசனத்தை இயக்குனர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இஷான் தேவ் இசையமைத்து இருக்கிறார். திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறார், சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
பவானி, கோனேரிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் வளர்ந்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.