கூத்தன்

‘கூத்தன்’ படத்தில் பிரபுதேவா தம்பி வில்லன் ஆகிறார்!;

Update:2017-06-06 13:02 IST
தொட்டா சினுங்கி, 1 2 3 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், ‘போகன்’ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்து போனார். அடுத்து, ‘கூத்தன்’ என்ற படத்தில் அவர் வில்லன் ஆகிறார்.

இது, நடன கலைஞர்களை பற்றிய படம். கலை நிகழ்ச்சிகளில் பின்னணி நடனம் ஆடும் இளைஞர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. புதுமுகம் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பாக்யராஜ், மனோபாலா, ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஊர்வசி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடிக்கிறார்கள். வெங்கி ஏ.எல். டைரக்டு செய்கிறார். மாடசாமி ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி இசையமைக்கிறார். நீல்கிரிஸ் முருகன்
தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்