ஜானி

‘சஸ்பென்ஸ்’-திகில் படம் பிரஷாந்த் நடிக்கும் ‘ஜானி’;

Update:2017-06-20 11:38 IST
‘சாஹசம்’ படத்தை அடுத்து பிரஷாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது, ஒரு ‘சஸ்பென்ஸ்’-திகில் படம். பிரஷாந்த், ‘சஸ்பென்ஸ்’ காட்சிகள் நிறைந்த திகில் படத்தில் நடிப்பது, இதுவே முதல் முறை. படத்துக்கு, ‘ஜானி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில், பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனைன்யா சோனி என்ற மும்பை அழகி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, ஆனந்தராஜ், பசுபதி, கிஷோர், சந்தியா, தேவதர்ஷினி, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘நான்,’ ‘அமரகாவியம்,’ ‘எமன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜீவா சங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். எம்.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டார் மூவீஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்