வனமகன்

ஜெயம் ரவி - ஏ.எல்.விஜய் இணையும் புதிய படத்திற்கு ‘வனமகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.;

Update:2017-06-20 12:15 IST
இந்த படம் குறித்த  முன்னோட்டத்தை கீழ பார்ப்போம்.. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம்  ‘வனமகன்’.

இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக  நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல்,  தம்பிராமையா ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தேவி’ படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இந்த  படத்தை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசை  அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த  படத்துக்கு ‘குமரி கண்டம்’ என்று முதலில்  பெயர் வைப்பதாக கூறப்பட்டது. இப்போது  ‘வனமகன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி- ஏ.எல்.விஜய் இணையும் இந்த படம்  புதிய கதை களத்தில் உருவாகிறது. ஜெயம்  ரவிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று  படக்குழுவினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்