செம

வள்ளிகாந்த் டைரக்‌ஷனில் தயாராகியுள்ள படம், ‘செம.’;

Update:2017-06-20 17:11 IST
“சம்சாரிக்கும்,சன்னியாசிக்கும் உள்ள வித்தியாசம்” படவிழாவில், பார்த்திபன் தமாஷ் ஜி.வி.பிரகாஷ்குமார்-அர்த்தனா ஜோடியாக நடித்து, வள்ளிகாந்த் டைரக்‌ஷனில் தயாராகியுள்ள படம், ‘செம.’ கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாசே இசையமைத்து இருக்கிறார். டைரக்டர் பாண்டிராஜ்-ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், நடிகர்-டைரக்டர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- “ஜி.வி. என்றால் கேர்ள்ஸ் வியூ. பெண்களின் பார்வை ஜி.வி.பிரகாஷ் மீது பிரகாசமாக இருக்கிறது. சம்சாரிக்கும், சன்னியாசிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சன்னியாசி புலித்தோல் மீது தூங்குவான். சம்சாரி புலியுடனே தூங்குவான்.

அப்படி புலியுடன் தூங்குபவர்தான் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்தின் கதாநாயகி அர்த்தனா ஜி.வி.பிரகாசை பற்றி பேசும்போது, அவருடைய மனைவியின் பார்வை அப்படித்தான் இருந்தது.” இவ்வாறு பார்த்திபன் தமாசாக பேசினார். “படங்களின் ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது” என்று சங்க செயலாளர் ஞானவேல்ராஜா பேசும்போது கூறினார்.

மேலும் செய்திகள்