வேலையில்லா பட்டதாரி
புதிய கூட்டணியுடன் தனுஷ் நடிக்க "வேலையில்லா பட்டதாரி" இரண்டாம் பாகம் உருவாகிறது.;
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. தனுஷின் 25-வது படமாக வெளிவந்த இப்படத்தின் கதை மட்டுமில்லாது அனிருத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவும், தனுஷுன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். அனிருத், ஷான் ரோல்டன் என இரு இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். அதேபோல், இப்படத்தில் கதாநாயகி யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என முதல் பாகத்தில் நடித்திருந்த பல்வேறு கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். தவிர நடிகை கஜோல் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க இருக்கிறார்.