நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.;

Update:2017-06-22 15:20 IST
தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’  படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து  ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின்  மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படமும் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. 

மேலும் செய்திகள்