விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்

தமிழ்-தெலுங்கு-இந்தியில் உருவான ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ “வாழ்க்கை என்பது ஒரு குறுகிய காலம். விரைவில் சம்பாதித்து வாழ்க்கையை ஆசை தீர அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், ஒரு இளைஞன்.;

Update:2017-07-18 16:04 IST
அவனுடைய நண்பனும் அதே எண்ணம் கொண்டவன். இவர்கள் மத்தியில் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஒரு பெண் வந்து சேருகிறாள். அவளும் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்க துடிக்கிறாள்.

இந்த மூன்று பேரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ஆபத்து என்ன? அதில் இருந்து மூன்று பேரும் தப்பினார்களா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது, ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்.’ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது.

கதாநாயகனாக நாக அன்வேஷ், கதாநாயகியாக மும்பை அழகி ஹேபா பட்டேல் நடிக்க, இவர்களுடன் சுமன், ஷாயாஜி ஷின்டே, பிரதீப் ராவத், ‘பிதாமகன்’ மகாதேவன் ஆகியோரும் நடித்துள்ளனர். சினேகன் பாடல்களை எழுத, பீம்ஸ் இசையமைத்து இருக்கிறார். படத்தின் கதை மற்றும் டைரக்‌ஷன் பொறுப்பை ‘பாகுபலி’ கே.பழனி கவனிக்க, திரைக்கதை அமைத்து படத்தை தயாரித்துள்ளார், ‘செந்தூரப்பூவே’ கிருஷ்ணா ரெட்டி. வி.பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். டைரக் டர் கே.பழனி, ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

மேலும் செய்திகள்