நான் யாரென்று நீ சொல்

‘நான் யாரென்று நீ சொல் ’ படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக கவர்ச்சி நடிகை சோனா!;

Update:2017-07-19 11:33 IST
நடிகை ராய் லட்சுமியை, ‘குறுக்கெழுத்து’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர், ஏ.எம்.பாஸ்கர். இவருடைய டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு, ‘நான் யாரென்று நீ சொல்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“கவர்ச்சி நடிகை சோனா முதன்முதலாக அம்மா வேடம் ஏற்றுள்ள படம், இது. இதில், கதாநாயகி சுரேகாவின் அம்மாவாக அவர் நடித்து இருக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் கீர்த்திதரன் அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகனாக நாகேசின் பேரன் (ஆனந்த்பாபுவின் மகன்) கஜேஷ் நடித்துள்ளார். ஜான் பீட்டர் இசையமைக்க, பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.மணிமேகலை தயாரித்து வருகிறார்.

கதைப்படி, சோனாவின் மகள் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவரை, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள். இரண்டு பேரையும் சோனா கண்டிக்கிறார்.

இந்த நிலையில், சோனா திடீரென்று கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? என்பதே திரைக்கதை. படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் நடைபெற்று முடிவடைந்தது. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”

மேலும் செய்திகள்