இவளுக இம்சை தாங்க முடியல

கோவாவில் தயாரான படம் ‘இவளுக இம்சை தாங்க முடியல’;

Update:2017-07-19 11:40 IST
“சமூக ஊடகங்கள் மூலம் பழகிய தன் காதலியை நேரில் சந்திக்க சென்னையில் இருந்து கோவா புறப்படுகிறான், ஒரு இளைஞன். அப்படி புறப்பட்டு போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை பரபரப்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்கிற படமே இவளுக இம்சை தாங்க முடியல” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் வி.என்.ராஜ சுப்பிரமணியன். படத்தை பற்றி மேலும் அவர் கூறியதாவது:-

“இந்த படத்தில், உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், ‘நான் சிவனாகிறேன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர். பாலாவின் ‘பரதேசி’ படத்தில் அதர்வாவுடன் நடித்தவர். கதாநாயகியாக சஹானா நடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க கோவாவில் வளர்ந்திருக்கும் படம், இது. ஒரு பயணத்தில் நிகழும் சம்பவங்களே திரைக்கதை. ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மலேசிய ‘பாப்’ இசைக்கலைஞர் கேஷ் வில்லன்ஸ் இசையமைத்து இருக்கிறார். சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் 3 பாடல்கள் உள்ளன. பாடல் காட்சிகள், இளைஞர்களை ஈர்க்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தை இம்மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்