உப்பு புளி காரம்
விக்கிரமாதித்யனிடம் வேதாளம் சொல்லும் கதை வேதாளம், விக்கிரமாதித்ய மகாராஜாவிடம் கதை சொல்லி புதிரான கேள்வி கேட்பதும், அதற்கு விக்கிரமாதித்யன் பதில் கூறுவதும், அதன் பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் அனைவரும் அறிந்த கதை.;
இன்றைய காலகட்டத்தில் விக்கிரமாதித்யனும், வேதாளமும் சந்தித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்ற கற்பனையில், ஒரு படம் தயாராகிறது.
இந்த படத்துக்கு, ‘உப்பு புளி காரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ராஜலீலை, தனம், ஆர்யா, பில்லா, சுட்ட பழம் உள்பட பல படங்களை வெளியிட்ட திரைப்பட வினியோக நிறுவனமான குருராஜா இண்டர்நேஷனல் தயாரித்து வெளியிடுகிறது. படத்தின் கதை- திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன் படத்தை தயாரிப்பவர், குருராஜா. படத்தை பற்றி அவர் சொல் கிறார்:-
“ஒவ்வொரு மனிதனிடமும் காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சர்யம் ஆகிய 6 குணங்கள் உள்ளன. தீய குணங்கள் கூடும்போது, மனிதன் மிருகமாகிறான். குறையும்போது, தெய்வம் ஆகிறான் என்ற கனமான கருத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம்.
விக்கிரமாதித்யனாக பிரபல மலையாள நடிகர் டினிடாம் நடிக்கிறார். வேதாளமாக பக்ரு நடிக்கிறார். இவர், ‘ஏழாம் அறிவு,’ ‘டிஷ்யும்’ ஆகிய படங்களில் நடித்தவர். கதாநாயகியாக வங்காள நடிகை பவுலமி நடித்து இருக்கிறார். பாபுராஜ், முகேஷ், டெல்லிகணேஷ், ஜெயந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ரபி தேவேந்திரன் இசையமைக்கிறார்.”