எனக்குள் ஏதோ
கதாநாயகனின் ‘கால்ஷீட்’ கிடைக்காததால், தயாரிப்பாளரே கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் பெயர், ‘எனக்குள் ஏதோ.’ நகைச்சுவை கலந்த திகில் படம், இது. படத்தின் தயாரிப்பாளர்-கதாநாயகன், பிரின்ஸ். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-;
“இது, என்னுடைய முதல் தயாரிப்பு. தயாரிப்பாளராகவே இருக்க ஆசைப்பட்ட நான், வேறு எந்த கதாநாயகனின் ‘கால்ஷீட்’டும் கிடைக்காததால், நானே நடிக்க வந்து விட்டேன்.
‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்தில் நடித்த சுவாதி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனோபாலா, சாம்ஸ், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கபிலன், யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கார்த்திக் விஜயகுமார் டைரக்டு செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) தூத்துக்குடி, குற்றாலம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.”