களரி
அலிபாபா, கற்றது களவு, கழுகு, யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை, பண்டிகை ஆகிய படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘களரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.;
கிருஷ்ணா நடிக்கும் ‘களரி’
கிருஷ்ணாவுடன் வித்யா பிரதீப், சம்யுக்தா மேனன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, மீரா கிருஷ்ணன், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகராக இருக்கும் வி.வி.பிரசன்னா, இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், கிரண் சந்த். செனித் கெலோத் தயாரித்து வருகிறார். இணை தயாரிப்பு: சந்தீப் வினோத், சரீன் கெலோத்.
படத்தை பற்றி டைரக்டர் கிரண் சந்த் கூறியதாவது:-
“களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், களரி என்றால் போர்க்களம் என்றும் கூறலாம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்க்களம்தான். கொச்சி நகரில், வாத்துருத்தி என்று ஒரு பகுதி இருக்கிறது. இது, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர், கிருஷ்ணா. இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான் படத்தின் கதை.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டும் காதல், குடும்பப்பாசம், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும், களரி உருவாகி இருக் கிறது.”