ஆறாம் வேற்றுமை
900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது.;
இந்த படத்துக்கு, ‘ஆறாம் வேற்றுமை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. புதுமுகங்கள் அஜய்-கோபிகா கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். யோகி பாபு, சூர்யகாந்த், சேரன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். சக்திவேல் தயாரிக்க, ஹரிகிருஷ்ணா டைரக்டு செய்திருக்கிறார். ஆர்.பாலசந்தர் வெளியிடுகிறார்.
படத்தை பற்றி டைரக்டர் ஹரிகிருஷ்ணா கூறும்போது, “ஹாலிவுட்டில் தயாரான ‘அபகலிப்டா’ போன்ற படம், இது. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களை பற்றிய கதை. சேலம், தர்மபுரி, அரூர், அதிராம்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படம் வளர்ந்து இருக்கிறது” என்றார்.