மெர்சல்

விஜய் வித்தியாசமான ‘கெட்-அப்’ களில் 3 கதாபாத்திரத்தில் விஜய் நடித்துவரும்;

Update:2017-09-25 15:15 IST
  ‘மெர்சல்’ இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் 100-வது படம் ‘மெர்சல்’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம் விஜய்யின் 61-வது படமாகும்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு - ஜி.கே.விஷ்ணு, திரைக்கதை - விஜயேந்திரபிரசாத், ரமண கிரிவாசன், பாடல்கள் - விவேக், தயாரிப்பு - முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அட்லி, இது விஜய்யுடன் இவர் கைகோர்க்கும் 2-வது படம்.

மேலும் செய்திகள்