பியார் பிரேமா காதல்

‘பியார் பிரேமா காதல்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ரெய்சா நடிக்கிறார்.;

Update:2017-11-22 12:02 IST
3 மொழிகளில் தயாராகிறது ‘பியார் பிரேமா காதல்’

‘பொறியாளன்,’ ‘சிந்து சமவெளி,’ ‘வில் அம்பு’ ஆகிய படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் அடுத்து, ‘பியார் பிரேமா காதல்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ரெய்சா நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இளன் டைரக்டு செய்கிறார். இவர், பல குறும் படங்களை டைரக்டு செய்தவர். கிருஷ்ணா நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கிரகணம்’ படத்தை இயக்கியவர்.

எஸ்.என்.ராஜராஜனுடன் இணைந்து தயாரிப்பதுடன், படத்துக்கு இசையும் அமைக்கிறார், யுவன் சங்கர் ராஜா. படத்தை பற்றி யுவன் சங்கர் ராஜா கூறியதாவது:-

“உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாக-அழுத்தமாக சொன்ன படங்கள்தான். அந்த வரிசையில் உருவாகும் படம்தான், ‘பியார் பிரேமா காதல்.’ இந்தியில், ‘பியார்’ என்றும், தெலுங்கில், ‘பிரேமா’ என்றும், தமிழில், ‘காதல்’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ஒரு நல்ல காதல் கதை கிடைக்காதா? என்று காத்திருந்த எனக்கு இந்த அழுத்தமான காதல் கதை கிடைத்து இருக்கிறது. பாடல்கள் மெருகேற்றப்பட்டு வருகிறது.”

மேலும் செய்திகள்