மாயவன்

பட அதிபர் சி.வி.குமார் முதன் முதலாக, ‘மாயவன்’ என்ற படத்தின் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தைஅவரும், கே.ஈ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Update: 2017-12-14 22:30 GMT
கதாநாயகனாக சந்தீப் கிஷன், கதாநாயகியாக லாவண்யா திரிபாதி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். டேனியல் பாலாஜி, தீனா, மைம்கோபி, ஜாக்கி ஷராப், அமரேந்திரன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள்.

படத்தின் திரைக்கதை-வசனத்தை நலன் குமாரசாமி எழுதியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படத்தை பற்றி சி.வி.குமார் கூறும்போது, 

“மாயவன், அறிவியல் சார்ந்த திகில் படம். நகரில் திடீர் திடீர் என்று மர்ம கொலைகள் நடைபெறுகின்றன. ‘சைக்கோ’ கொலையாளியை பிடிக்க போலீஸ் அதிகாரி சந்தீப் கிஷன் துப்பு துலக்குகிறார். அவர், கொலையாளியை நெருங்கும்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. கொலையாளியை அவர் பிடித்தாரா? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது கதை. சில உண்மை சம்பவங்களும் படத்தில் உள்ளன” என்றார். 

மேலும் செய்திகள்