மதுர வீரன்

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டு வீரராக அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2018-02-01 23:02 IST
ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம் 'மதுர வீரன்'.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தாக ‘மதுர வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா.  இசை - சந்தோஷ் தயாநிதி,  தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன். 

மேலும் செய்திகள்