8

இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்க பரத் நடிக்கும் புதிய படம், ‘8’;

Update:2018-04-01 22:36 IST
மதுரை சம்பவம், ஜிகினா, சவுகார் பேட்டை உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர், ஜான் பீட்டர். இவர், முதன்முதலாக ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பரத் கதாநாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் அழகி பூஜா ஜாவேரி, கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ரோபோ சங்கர், நாகிநீடு, தேவதர்சினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

எம்.ஜான் பீட்டர் இசையமைப்பதுடன், பட்டுக்கோட்டை என்.ராஜ்குமாருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் கவிராஜ், கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். விவேகா, யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

முதல்கட்ட படப் பிடிப்பு சென்னை, பட்டுக்கோட்டை மற்றும் கேரளாவில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இயற்கை எழில் மிகுந்த இடங்களில் நடைபெற இருக்கிறது.

“மனிதன் வாழும்போது 8 நிலைகள் உண்டு. அதேபோல் இறந்த பிறகும் 8 நிலைகள் உண்டு. எல்லா மனிதர் களுக்கும் இது பொருந்தும். இந்த கருவை கதைக்களமாக வைத்து காதல், ‘காமெடி’ கலந்த திகில் படமாக இது தயாராகிறது” என்று படத்தின் டைரக்டர் விஜய் கவிராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்