பேய் இருக்கா இல்லையா

டைரக்டர் ஏ.வெங்கடேசிடம் உதவி டைரக்டராக இருந்த பா.ரஞ்சித்குமார், கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பேய் இருக்கா இல்லையா.’;

Update:2018-04-25 01:31 IST
இந்த படத்தை பற்றி டைரக்டர் ரஞ்சித்குமார் கூறியதாவது. “படத்தின் பெயரை பார்த்து, இது பேய் படம் என்று நினைக்கலாம். அதையும் தாண்டி சண்டை காட்சிகள், நகைச்சுவை, குடும்பப்பாசம் என்று ஒரு வர்த்தக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கும். கடவுளை நேரில் பார்த்தேன் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் பேயை பார்த்தேன் என்று சொன்னால், உடனே நம்பிவிடுவார்கள்.

பேய் என்றால் என்ன? மக்களின் மூட நம்பிக்கையா அல்லது இறந்தவர்களின் ஆத்மாவா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைதான், இந்த படம். இதில் அமர், சுரேஷ், குமார், சதா ஆகியோர் கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக ஜோதிஷா, பிந்து ரோஷினி, கீர்த்தி கவுடா ஆகிய மூன்று பேரும் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் விஜயகுமார், லிவிங்ஸ்டன், மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன், சுவாமிநாதன், சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சம்பத் இசையமைக்க, டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தின் கடைசி 15 நிமிட காட்சி, ரத்தத்தை உறைய வைக்கும் வகையில், படுபயங்கரமாக இருக்கும். அந்த காட்சி, காரைக்குடியில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு சென்னை, மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் நடந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நிறைவு பெற்றன. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (மே) திரைக்கு வரும்.”

நகைச்சுவையும், திகிலும் கலந்து, ‘பேய் இருக்கா இல்லையா’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன் படத்தை தயாரிக்கிறார், பா.ரஞ்சித்குமார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருந்த 4 நண்பர்கள், மிகப்பெரிய தாதா ஒருவரின் தம்பியை அடித்து விடுகிறார்கள். கோபம் அடைந்த தாதா அந்த 4 பேரையும் கொல்வதற்கு தேடுகிறார். தாதாவுக்கு பயந்து 4 நண்பர்களும் ஒரு பேய் பங்களாவில் அடைக்கலமாகிறார்கள். அங்கு போன பின்தான் அது ஒரு பேய் பங்களா என்பது 4 பேருக்கும் தெரிகிறது.

பேய்களிடம் இருந்தும், தாதாவிடம் இருந்தும் அவர்கள் தப்பினார்களா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தில் அமர் கதாநாயகனாகவும், ஜோதிஷா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். லிவிங்ஸ்டன், மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்.சம்பத் பாடல்கள் எழுதி, இசையமைக்கிறார்.

மேலும் செய்திகள்