சில்லாக்கிடும்

பயணத்தை மையமாக வைத்து ஒரு நகைச்சுவை திகில் படம். ‘சில்லாக்கிடும்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.;

Update:2018-05-08 13:21 IST
‘சண்டி குதிரை,’ ‘மேல்நாட்டு மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ராஜ்கமல் தற்போது, ‘சில்லாக்கிடும்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ராகினி நட்வானியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவர், விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் நடித்து இருக்கிறார்.

இது, ஒரு பயணத்தை மையமாக வைத்து உருவாகும் நகைச்சுவை திகில் படம். இதில், தாடி பாலாஜி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அர்ச்சனா சிங் நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், ரோபோ சங்கர் நடிக்கிறார். படத்தை தயாரித்து இசையமைப் பவர், ஜெபகுமார் பெஞ்சமின்.

கம்பன் செல்வராஜ் கதை எழுத, புதுமுக இயக்குனர் ப்ளசோ டைரக்டு செய்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் மணிவர்மா, இந்த படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

மேலும் செய்திகள்