என் காதலி சீன் போடுறா

``இன்றைய சமுதாயத்தில் எல்லோருமே புத்திசாலிகள்தான். ஆனால் அவர் களையே சாமர்த்தியமாக ஏமாற்ற தெரிந்த அதிபுத்திசாலிகளும் அவர்களுக்குள் கலந்து இருப்பது, உண்மை. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, `என் காதலி சீன் போடுறா' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.;

Update:2018-05-11 13:42 IST
உண்மை சம்பவங்களை மையப்படுத்தி `என் காதலி சீன் போடுறா'.
இந்த படத்துக்குப்பின், யாரும் யாரிடமும் ஏமாறாமல் இருந்தால், நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்'' என்கிறார், டைரக்டர் ராம்தேவா. இவர், `டீக்கடை பெஞ்ச்' படத்தை இயக்கியவர். `என் காதலி சீன் போடுறா' படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

``இந்த படத்தில், `அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷாலு அறிமுகம் ஆகிறார். `ஆடுகளம்' நரேன், மனோபாலா, டாக்டர் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய் கிறார்.

ஜோசப் பேபி தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சி, ஆனை மலை ஆகிய இடங்களில் நடைபெற இருக் கிறது.''

மேலும் செய்திகள்