தோனி கபடி குழு
விளையாட்டை கருவாக கொண்ட ‘தோனி கபடி குழு’ சமூகத்துக்கு தேவை கிரிக்கெட்டா, கபடியா? என்பதை கருவாக வைத்து ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.;
இந்த படத்துக்கு, ‘தோனி கபடி குழு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், கதாநாயகனாக அபிலாஷ் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-
‘‘இந்த படம், ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டது. வியாபார ரீதியில் கனமான கதையம்சம் உள்ள படம். இதில், கதை நாயகர்களாக வரும் இளைஞர்களுக்கு ஒரு சமூக பிரச்சினை ஏற்படுகிறது. கிரிக்கெட்டா, கபடியா? எந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விக்கான பதில்தான் கதை.
படத்தின் கதாநாயகி, லீமா. இவர், கேரளாவை சேர்ந்தவர். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், ‘மதராச பட்டினம்’ படத்தில், ஆர்யாவின் தங்கையாக நடித்தார். தெனாலி, நகைச்சுவை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் நவீன் சங்கர், சரண்யா, செந்தில், புகழ், விஜித் சரவணன், சி.என்.பிரபாகரன், ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஏ.வெங்கடேசிடம் உதவி டைரக்டராக இருந்த பி.அய்யப்பன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். படத்தின் கதை-திரைக்கதை-வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார். ரோஷன் ஜோசப் இசையமைத்து இருக்கிறார். எஸ்.நந்தகுமார் தயாரித்துள்ளார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்-நடிகைகளுக்கும் ஒரு மாதம் பயிற்சி அளித்தபின், படப்பிடிப்பை தொடங்கினோம்.
படப்பிடிப்பு கள்ளக்குறிச்சி, பாதூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்று 52 நாட்களில் முடிவடைந்தது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’