நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
விறுவிறுப்பான திரைக்கதையுடன் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற படம் தயாராகி இருக்கிறது;
“தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப்பெரிய கேள்வி, ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு.’ அந்த அளவுக்கு அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கலை சந்தித்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ என்ற படம் தயாராகி இருக்கிறது” என்று கூறுகிறார், படத்தின் டைரக்டர் நல்.செந்தில்குமார். இவர், மேலும் கூறுகிறார்:-
“அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில், மக்களை அச்சுறுத்தும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அந்த ஊர் மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், பிரச்சினைகள் தீவிரம் அடைந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
தொடர்ச்சியான அந்த சம்பவங்களுக்கு காரணம் என்ன? யாரால் அந்த கிராமத்து மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள் என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தானா? பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டானா? என்பதே இந்த படத்தின் கதை. திகில் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம், இது.
இதில் கதாநாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்து இருக்கிறார். ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்ட இளைஞராக அவர் வருகிறார். அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்து இருக்கிறார்.
இவர்களுடன் டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், அப்புக்குட்டி, ‘பசங்க’ சிவகுமார், பெஞ்சமின், மீராகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரித்துள்ளார்.