குத்தூசி
‘குத்தூசி’ படம், முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியிருக்கிறது.;
விவசாயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் போராடும் நாயகன்
“இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை பார்த்திருப்போம். ஆனால், ‘குத்தூசி’ படம், முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியிருக்கிறது” என்கிறார், டைரக்டர் சிவசக்தி. இவர் மேலும் கூறுகிறார்:-
“நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் போய்விட்டது. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என்று உலக நாடுகள் அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறான் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாகி விட்டது. அதை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறோம்.
‘வத்திகுச்சி’ படத்தில் நடித்த திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ‘ஆடுகளம்’ புகழ் ஜெயபாலன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். அந்தோணி என்ற வெளிநாட்டு நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லட்சுமி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதி மற்றும் சென்னையில், 54 நாட்கள் நடைபெற்று இருக்கிறது.
காதல், அதிரடி சண்டை காட்சிகள், குடும்பப்பாசம் ஆகிய அம்சங்கள் கலந்து, ‘குத்தூசி’ படம் தயாராகி இருக் கிறது. என்.கண்ணன் இசையமைத்து இருக்கிறார்.”