ஜெஸி

ஹாலிவுட் பாணியில் திகிலூட்ட வருகிறது, ‘ஜெஸி’ இந்த படம் ரசிகர்களுக்குள் புதுவிதமாக திகிலூட்டும்” என்கிறார், டைரக்டர் இசாக்.;

Update:2018-07-19 22:27 IST
“நாட்டில் நடக்கும் தடுக்க முடியாத குற்றங்களை அடிப்படையாக கொண்டு, ‘ஜெஸி’ என்ற திகில் படம் தயாராகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்களுக்குள் புதுவிதமாக திகிலூட்டும்” என்கிறார், டைரக்டர் இசாக். இவர், ‘கின்னஸ்’ சாதனை படமான ‘அகடம்,’ ‘நாகேஷ் திரையரங்கம் ஆகிய 2 படங்களை இயக்கியவர். ‘ஜெஸி’ படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:-

“இது, ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் படம். இதில், நகைச்சுவையை கலக்கவில்லை. பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட இயக்குனர், பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார். இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார். அந்த பங்களாவில் பேய் இருக்கிறது. டைரக்டர் பேனாவை திறந்து எழுத ஆரம்பிக்கும்போதெல்லாம் அவரை எழுத விடாமல் பேய் தடுக்கிறது. அவர் கதையை எழுதினாரா, இல்லையா? என்பது மீதி கதை.

அறிமுக நாயகன் ஜெமினி டைரக்டராக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடிகளாக ஸ்ரீபிரியங்கா, லட்சுமி கிரண் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவு செய்ய, சஜித் ஆன்டர்சன்ராஜ் இசையில், ‘ஜெஸி’ படுபயங்கரமான படமாக உருவாகி இருக்கிறது. கதாநாயகிகள் ஸ்ரீபிரியங்கா, லட்சுமி கிரண் ஆகிய இருவரும் பேய் பிடித்த பெண்களாக நடித்துள்ளனர்.

பி.பீ.எஸ்.ஈசா குரு தயாரிக்கிறார். தடா, ஆரோவில் போன்ற இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வரும்.”

மேலும் செய்திகள்