ஆர்வ கோளாறு

டைரக்டர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ‘ஆர்வ கோளாறு’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது.;

Update:2018-07-19 23:04 IST
 இதில் கதாநாயகனாக அபிஷேக், கதாநாயகியாக பிரீத்தி டயனா அறிமுகமாகிறார்கள்.  ‘பாய்ஸ்’ ராஜன், மார்ட்டின் ஜெயராஜ், ஜெகதீஷ், சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.கே.சம்சுதீன் தயாரித்துள்ளார். ஜி.வி.சந்தர் டைரக்டு செய்துள்ளார்.

“ஆர்வ கோளாறால் வரும் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது. தனது காதலை நாயகனே ஆர்வ கோளாறினால் அழிப்பது மாதிரியான கதை. தனியார் நிறுவனததில் நாயகன் வேலை பார்க்கிறார். நாயகி கல்லூரி மாணவியாக வருகிறார். நாயகி மீது நாயகனுக்கு காதல் வருகிறது. அந்த காதலுக்கு உதவும்படி தனது 3 நண்பர்களிடம் வேண்டுகிறான். அந்த நண்பர்களும் ஆர்வ கோளாறு உள்ளவர்கள்.

நாயகனும், நாயகியும் திருமணத்துக்கும் தயாராகிறார்கள். அப்போது சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. நாயகன் கோபத்தினால் காதலுக்கு பெரிய பாதிப்பு வருகிறது. இருவரும் சேர்ந்தார்களா? நண்பர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது கதை. எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். வணிக ரீதியிலான விஷயங்களும் படத்தில் இருக்கும்.

கும்பகோணம் கதைக்களமாக வைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கேயே நடந்துள்ளது. சரண், பாலகணேஷ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.”

மேலும் செய்திகள்