பார்த்திபன் காதல்
உண்மை சம்பவத்துடன் இளமை கொஞ்சும் காதல் படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘பார்த்திபன் காதல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.;
இதில் கதாநாயகனாக யோகீஷ், கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார்கள். இந்த படத்துக்கு கதை எழுதி வள்ளிமுத்து டைரக்டு செய்கிறார். இவர், ‘என்னமோ நடக்குது,’ ‘அச்சமின்றி அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-
“கோவில்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து இந்த படம் தயாராகிறது. எல்லோருக்குமே காதல் பிடிக்கும். ஆனால் சொந்த உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் அது வரும்போது, எதிர்க்கிறார்கள். காதலுக்கு எதிராக இருக்க வேண்டாம். அதை ஆதரியுங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக இந்த படம் உருவாகிறது.
நாயகன் யோகீஷ் ஓவிய கல்லூரி மாணவராக வருகிறார். நாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார். கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.”