மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

டைரக்டர் மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்த ராகேஷ், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.;

Update:2018-07-21 22:57 IST
தணிக்கை குழுவினருடன் போராடிய டைரக்டர்

ரவிராஜ், சரண்யா பொன்வண்ணனுடன் துருவா, அஞ்சனா. டைரக்டர் மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்த ராகேஷ், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். பெண்களிடம் சங்கிலி பறிக்கும் கும்பலை பற்றிய படம், இது. ‘திலகர்’ பட புகழ் துருவா கதாநாயகனாக நடிக்க, ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ஜே.டி.சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். அச்சு இசையமைத்து இருக்கிறார். வி.மதியழகன், ஆர்.ரம்யா ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் ராகேஷ் கூறியதாவது:-

‘‘சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள படம், இது. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு, ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பெண்களிடம் சங்கிலி பறிக்கும் கும்பலை பற்றிய எங்கள் படத்துக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள். விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்தை தணிக்கை குழுவினர் எதற்காக தடுக்க நினைத்தார்கள் என்று புரியவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்குப்பின் படத்துக்கு, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள்.’’

மேலும் செய்திகள்