வளையல்

சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘வளையல்’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. சக்தி சிவன்-பவ்யஸ்ரீ ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, மனோஜ் கே.பாரதி வில்லனாக நடித்து இருக்கிறார்.;

Update:2018-08-01 22:09 IST
‘வளையல்’ படத்தில் திருடனை காதலிக்கும் கதாநாயகி! ஏ.குருசேகரா டைரக்டு செய்திருக்கிறார். இவர், டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவியாளராக வேலை செய்தவர். ‘வளையல்’ பற்றி இவர் கூறுகிறார்:-

“நண்பருடன் சேர்ந்து திருட்டு தொழில் செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதை, இது. அவன் திருட்டு நகையை விற்பதற்காக ஒரு மார்வாடியிடம் வரு கிறான். அவன் மீது மார்வாடியின் மகள் காதல்வசப்படு கிறாள். இவர்களின் காதல் என்ன ஆகிறது? என்பதே திரைக்கதை. முரளி சுப்பிரமணி இசையமைக்க, சிவா.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.காளியப்பன் தயாரித்து இருக்கிறார்.

படம் சென்னை, ஊட்டி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், “சிறப்பான காதல் கதை” என்று பாராட்டி, அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.”

மேலும் செய்திகள்