சர்கார்

‘சர்கார்’ படத்தில் படித்து முடித்த பட்டதாரி இளைஞராக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது, அமெரிக்காவில் நடக்கிறது.;

Update:2018-08-14 22:46 IST
இந்த படம், ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ஒரு தெலுங்கு படத்தின் ‘ரீமேக்’ என்று ஒரு தகவல் பரவியது. அதுபற்றி விசாரித்தபோது, தவறான தகவல் என்று தெரியவந்தது. ‘சர்கார்’ படத்தின் கதை, நேரடி தமிழ் படத்தின் கதை என்பது உறுதியானது.

இதில் விஜய், படித்து முடித்த பட்டதாரி இளைஞராக நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட அறிமுக பாடல் காட்சி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்