ஜீனியஸ்
‘ஜீனியஸ்’ படத்தில் சுசீந்திரன்-யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்தனர் டைரக்டர் சுசீந்திரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் ராசியான கூட்டணியாக கருதப்படுகிறார்கள்.;
‘நான் மகான் அல்ல,’ ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய 2 படங்களிலும் இணைந்து பணிபுரிந்தார்கள். அந்த 2 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றன.
இந்த படங் களுக்குப்பின் சுசீந்திரன், யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் ‘ஜீனியஸ்’ என்ற படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். புது பாடகர் ஸ்ரீகாந்த் பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.
சிறந்த கதையம்சம் கொண்ட படத்துக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம் என்பதால், டைரக்டர் சுசீந்திரன், ‘ஜீனியஸ்’ படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டு, யுவன் சங்கர் ராஜாவுக்கு படத்தை திரையிட்டு காண்பித்து, பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்றுள்ளார்.
படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் சங்கர் ராஜா, “படம் நன்றாக வந்துள்ளது” என்று படக்குழு வினரை பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை ரோஷன் தயாரித்து நடித்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.