சீமத்துரை
எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும், `சீமத்துரை' ஈ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்க, சந்தோஷ் தியாகராஜன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். கீதன்-வர்ஷா பொல்லம்மா கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள்.;
எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில், `சீமத்துரை' என்ற படம் தயாராகி இருக்கிறது. ஈ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்க, சந்தோஷ் தியாகராஜன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். கீதன்-வர்ஷா பொல்லம்மா கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார்.
படத்தை பற்றி டைரக்டர் சந்தோஷ் தியாகராஜன் கூறியதாவது:-
``ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில் புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதில் இருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதில் இருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.
அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில் அவன் கொண்ட கர்வம் ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவு களும்தான் `சீமத்துரை' படத்தின் கதை. இதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்.
பட்டுக்கோட்டையை கதைக்களமாக கொண்ட இந்த படத்துக்கு டி.திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசையமைத்து இருக்கிறார். படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.''