குட்டி தேவதை

``இந்த படத்தில், சோழவேந்தன்-தேஜா ரெட்டி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வாசு விக்ரம், சத்யஜித், சங்கர் கணேஷ், காயத்ரி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.;

Update:2018-08-18 23:01 IST
ஆணவக்கொலை பற்றிய படம் `குட்டி தேவதை'

``உலகம் 21-ம் நூற்றாண்டுக்கு வந்த பின்னும் சாதிக் கொடுமைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் காதலர்களுக்கு இன்னமும் பாதுகாப்பு இல்லை. அவர்களை சமூகம் வாழ விடுவதும் இல்லை. அப்படி ஒரு கிராமத்தில் சாதி விட்டு வேறொரு சாதியில் திருமணம் புரிந்த காதலர்களை ஆணவக் கொலை செய்ய முயற்சிக்கிறார், பஞ்சாயத்து தலைவர். அவரிடம் இருந்து காதல் ஜோடி தப்பித்ததா, இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் படமாக `குட்டி தேவதை' தயாராகி இருக்கிறது'' என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் கே.அலெக்சாண்டர். அவர் மேலும் கூறுகிறார்:-

``இந்த படத்தில், சோழவேந்தன்-தேஜா ரெட்டி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வாசு விக்ரம், சத்யஜித், சங்கர் கணேஷ், காயத்ரி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

மு.மேத்தா, பிறைசூடன் ஆகியோருடன் ஒரு பாடலை எழுதி, இசையமைக்கிறார், அமுதபாரதி. பி.அறிவரசன் தயாரிக்க, இணை தயாரிப்பு: ராணியம்மாள் ராஜா, ராஜம்மாள் செல்லன், அனிதா ஸ்டாலின், யோக விக்னேஷ்வர். படம், வேகமாக வளர்ந்து வருகிறது.''

மேலும் செய்திகள்