பரமபதம் விளையாட்டு

தமிழ் சினிமாவின் ‘மார்க்கண்டேயி’ என்று அழைக்கப்படும் திரிஷா நடித்து வேகமாக வளர்ந்து வரும் படம், ‘பரமபதம் விளையாட்டு.;

Update:2018-09-26 05:52 IST
“திரிஷா நடிப்பில் புதுமையான கதையம்சம் கொண்ட படம்!”
தமிழ் சினிமாவின் ‘மார்க்கண்டேயி’ என்று அழைக்கப்படும் திரிஷா நடித்து வேகமாக வளர்ந்து வரும் படம், ‘பரமபதம் விளையாட்டு.’ முடிவடையும் நிலையில் உள்ள இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் திருஞானம் சொல்கிறார்:-

“திரிஷா நடிப்பில் உருவான படங்களில், இது புதுமையான-முக்கியமான படமாக இருக்கும். இதில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது தனது மார்க்கெட் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்று அவர் நம்புகிறார். இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. இதுதான் உண்மை.

2 கதாபாத்திரங்களிலும் அவர் விரும்பி நடிக்கிறார். படப்பிடிப்பின்போது கடினமான காட்சியில் கூட, திரிஷா ஒரே ‘டேக்’கில் நடித்து படக்குழுவினர் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். படத்தில், நிறைய திருப்பங்கள் இருக்கும். நந்தா, வேலராமமூர்த்தி ஆகிய இருவரும் முக்கிய வேடங் களில் நடிக்கிறார்கள்.

பல பிரமாண்டமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்.டி.ராஜசேகர், இந்த படத்தின் கதையை கேட்டு, மற்ற படங்களின் தேதியை மாற்றிவிட்டு, எங்க படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஹவர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.”

மேலும் செய்திகள்