என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா

படங்களில் கதாநாயகியாகவும், தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அவர், திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர், 22 வருடங்களுக்குப்பின், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.;

Update:2018-10-23 22:22 IST
22 வருடங்களுக்குப்பின் மீண்டும் சித்ரா. பல வருடங்களுக்கு முன் நல்லெண்ணை விளம்பர படத்தின் மூலம் பிரபலமானவர், சித்ரா. படங்களில் கதாநாயகியாகவும், தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அவர், திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர், 22 வருடங்களுக்குப்பின், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். அவர் மறுபிரவேசம் செய்யும் படத்தின் பெயர், ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா.’

இந்த படத்தில் விகாஷ் கதாநாயகனாக நடிக்க, மதுமிதா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில், டெல்லி கணேஷ் நடிக்கிறார். சித்ராவும், டெல்லி கணேசும் இளமை பருவத்துக்கு மாறி, ‘காமெடி’ செய்வது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. ஒளிப்பதிவு செய்வதுடன் படத்தை இயக்குபவர், நவீன் மணிகண்டன். இவர் கூறியதாவது:-

“குட்டி சுவற்றில் உட்கார்ந்தபடி பொழுதை கழிக்கும் இளைஞர்களும் வாய்ப்பு வந்தால், வாழ்க்கையில் சாதிப்பார்கள் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி வரும் படம், இது. நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. டெல்லி கணேசும், சித்ராவும் கதாநாயகனின் அப்பா-அம்மாவாக நடித்துள்ளனர். இவர்களின் கடந்த கால காதல் காட்சிகள், படத்தில் தமாசாக வைக்கப் பட்டுள்ளன. லோகேஷ், இசையமைத்து இருக்கிறார். சாகுல் ஹமீது தயாரித்து வருகிறார். படம் முழுவதும் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வளர்ந்து இருக்கிறது.”

மேலும் செய்திகள்