சிதம்பரம் ரயில்வே கேட்
1980-ம் ஆண்டில், சிதம்பரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற புதிய படம் தயாராகிறது.;
1980-ல் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ இந்த படத்தை இயக்கி வருகிற சிவபாலன் கூறியதாவது:-
“1980-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து, இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். உயிருக்கு உயிரான 2 நண்பர்கள் காதல்வசப்படுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதல் வந்தபின், இருவருக்கும் இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அதன் விளைவுகள் என்னென்ன? என்பதே படத்தின் கதை.
நண்பர்களுக்கு இடையேயான நட்பு, கருத்து வேறுபாடு, அவர்களின் காதல் ஆகியவற்றை மிக யதார்த்தமாக பேசப்போகும் படம், இது. இதற்காக, சென்னை மோகன் ஸ்டூடியோவில் 1980 காலகட்டம் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில், முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட உள்ளன.
இதில், மகேந்திரன், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி இருவரும் நண்பர்களாக நடிக்க, அவர்களின் காதலிகளாக புதுமுகங்கள் நீரஜா, காயத்ரி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ரேகா, பால சரவணன், சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.”