துலாம்

போதை கலாசாரம் பற்றி ‘துலாம்’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை விஜய் விகாஸ் தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார்.;

Update:2018-11-10 12:41 IST
போதை கலாசார படத்துக்கு சோனியா அகர்வால் பாராட்டு

போதை கலாசாரம் பற்றி ‘துலாம்’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை விஜய் விகாஸ் தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை நடிகை சோனியா அகர்வால் வெளியிட்டார். பாடல்களை கேட்டு ரசித்த அவர், ‘‘தாய் மீது பாசம் கொண்ட அனைவருக்கும், ‘பெத்த உசுரு ரத்த உசுரு’ என்ற பாடல் பிடிக்கும்’’ என்றார். ‘ஜிகினா ஜிகினா’ என்ற குத்தாட்ட பாடல், இளைஞர்களுக்கு பிடிக்கும் என்று கூறினார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர்-டைரக்டர் விஜய் விகாஸ் கூறியதாவது:-

‘‘இந்த படத்தின் கதைக் கரு இன்றைய மாணவர் கள் போதை கலாசார த்தால் எப்படியெல் லாம் பாதிக்கப் படுகிறார்கள்? என்பதை சித்தரிக்கிறது. இன்றைய காலகட்டத்தில், அப்பாவிகள் சட்டத் தினால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? அந்தஸ்தில் இருப்பவர்கள் சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்து விட்டு, அதில் இருந்து எளிதாக எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதை எடுத்துரைக் கிறது.

இதில் கதாநாயகனாக விவாத், கதாநாயகியாக ஜெயஸ்ரீ நடிக்க, மனோபாலா, பொன்னம்பலம், அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். அலெக்ஸ் பிரேம்நாத் இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்