கா
அதிரடி சண்டை மற்றும் திகிலுடன் போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா நடிக்கும் படம் கா சினிமா முன்னோட்டம்.;
‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், வட சென்னை உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் இப்போது, ‘கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பாம்புகள் பற்றிய கதை.
இதையடுத்து, அதிரடி சண்டை காட்சிகளுடன் கூடிய ஒரு திகில் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். அவருடன் கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ராஜேஷ்குமார் தயாரிக்கிறார். சத்யா டைரக்டு செய்கிறார். இவர், ‘தில்’ என்ற கன்னட படத்தை இயக்கியவர். ‘ராஜ்பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் படம் தயாராகிறது. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சி, குஜராத் மாநிலம் பரோடா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.