அனுநாகி

மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ படத்துக்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா, ‘அகோரி’ என்ற படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இதையடுத்து அவர், ‘அனுநாகி’ என்ற புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடக்கும் மோதலை கருவாக கொண்ட படம், இது. அறிவியல் சார்ந்த சஸ்பென்ஸ்-திகில் படமாக தயாராகிறது.;

Update:2018-12-06 22:19 IST
தமிழ்-தெலுங்கு-இந்தியில் தயாராகிறது ‘அனுநாகி’ படத்தில் 3 வில்லன்கள்
அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் டி. டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

‘‘அனுநாகி படத்தில் புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். ரியாஸ்கான், மைம்கோபி, ரவிகாலே ஆகிய மூன்று பேரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர் களுடன் ‘ராட்சசன்’ பட வில்லன் சரவணன், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது. ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை கே.ராஜ கோபால் இணைந்து தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்