கிருஷ்ணம்

ஒரு பக்தரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘கிருஷ்ணம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.;

Update:2018-12-18 00:37 IST
உண்மை சம்பவம் படமானது குருவாயூரப்பன் அருளால் உயிர் பிழைத்த பக்தர்

ஒரு பக்தரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘கிருஷ்ணம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. படத்தை பற்றிய விவரங்கள் வருமாறு:-

கிருஷ்ணன், கல்லூரி மாணவர். ஆச்சார குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவை காதலித்தார். இந்த காதலுக்கு கிருஷ்ணனின் பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிருஷ்ணனும், அவருடைய பெற்றோர்களும் குருவாயூரப்பனின் தீவிர பக்தர்கள்.

கல்லூரியில், மாணவர்களுக்கு இடையே நடன போட்டி வருகிறது. இதற்காக ஒத்திகை பார்த்த கிருஷ்ணன், திடீர் என்று மயங்கி விழுகிறார். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக கிருஷ்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதில், 10 சதவீதம்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அதன்படி, அறுவை சிகிச்சை நடக்கிறது. குருவாயூரப்பன் அருளால் கிருஷ்ணன் மறுபிறவி எடுக்கிறார். இப்படி ஒரு காட்சி, ‘கிருஷ்ணம்’ படத்துக்காக படமானது.

இந்த படத்தை தயாரிப்பது பற்றி பி.என்.பலராமன் கூறியதாவது:-
“எங்கள் மகனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான் இந்த படம். எங்கள் மகன் அக்‌ஷய் கிருஷ்ணனே கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருடைய காதலியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். தினேஷ்பாபு டைரக்டு செய்து இருக்கிறார்.

சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினித், அஞ்சலி உபசனா ஆகியோரும் நடித்துள்ளனர். அரிபிரசாத் இசையமைத்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்