யோகிடா

‘கபாலி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சாய் தன்சிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார்.;

Update:2018-12-18 01:04 IST
படத்தின் பெயர், ‘யோகி டா.’ இசை, காதல், சண்டை காட்சிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள படம், இது.

வேதாளம்’ படத்தில் அறிமுகமாகி, காஞ்சனா, ஜெகன் மோகினி ஆகிய படங்களிலும் நடித்த கபீர் சிங், இதில் வில்லனாக நடிக்கிறார். அறிமுக டைரக்டர் கவுதம் கிருஷ்ணா இயக்குகிறார். இவர், சக்ரி டோலெட்டியிடம் உதவி டைரக்டராக பணி புரிந்தவர்.

ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி இஷ்ராத் காதறி இசையமைக்கிறார். அருணகிரி, ராஜ்குமார் ஆகிய இருவரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்