ஆரி-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்
காதலுக்கு காதலே எதிரி என்ற கருவை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில், ஆரி-ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.;
‘அய்யனார்’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றிய முக்கிய தகவல்களை இவர் வெளியிட்டார். அவை வருமாறு:-
‘‘1960-களில் காதலுக்கு மதம் தடையாக இருந்தது. 80-களில் சாதி தடையாக இருந்தது. 2000-ல் அந்தஸ்து தடையாக இருந்தது. இப்போது காதலுக்கு காதலே தடையாக இருக்கிறது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதைக்களம்தான் இந்த படம்.
இதில், கடந்து போன காதலையும் பார்க்கலாம். இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படம், கவி நயம் கொண்டதாக இருக்கும். ஈ.ஆர்.ஆனந்தன், பி.தர்மராஜ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப குழு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.’’