ஹலோ

‘ஹலோ’ படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், அகில், ரம்யாகிருஷ்ணன். ஆந்திராவில், ரூ.50 கோடி வசூல் செய்த ‘ஹலோ’ படம், தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.;

Update:2018-12-18 04:46 IST
அமலா மகனும், பிரியதர்ஷன் மகளும் இணைந்து நடித்த படம்

இந்த படத்தில், நாகார்ஜுன்-அமலா தம்பதியின் மகன் அகில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில், ரம்யாகிருஷ்ணன், ஜெகபதிபாபு ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்,’ ‘சூர்யா நடித்த ‘24’ ஆகிய படங்களை டைரக்டு செய்த விக்ரம் கே.குமார் டைரக்டு செய்திருக்கிறார். நாகார்ஜுன் தயாரிக்கிறார். ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி, படத்தை வெளியிடுகிறார்.

‘ஹலோ’ படத்தை பற்றி அதன் கதாநாயகன் அகில் கூறியதாவது:-

“சுட்டிக்குழந்தை’ என்ற தமிழ் படத்தில் நான் குழந்தையாக நடித்தேன். அந்த வகையில், தமிழ் ரசிகர்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. என் அம்மா அமலாவும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார்.

இந்த படம் (ஹலோ), அதிரடி சண்டை காட்சிகளும், திகிலும் கலந்த பக்கா ‘கமர்சியல்’ சினிமா. சண்டை காட்சிகளை, தாய்லாந்தை சேர்ந்த சண்டை கலைஞர்கள் அமைத்து இருக்கிறார்கள். படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வரும்.”

மேலும் செய்திகள்