தி லெஜன்ட் ஆப் சந்திரபாபு
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர், சந்திரபாபு. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது.;
கே.ராஜேஷ்வர் டைரக்ஷனில் சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது
தமிழ் பட உலகில் 1950 முதல் 1970 வரை நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும், குணச்சித்ர நடிகராகவும் சந்திரபாபு பிரபலமாக இருந்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறை ‘தி லெஜன்ட் ஆப் சந்திரபாபு’ என்ற பெயரில், டைரக்டர் கே.ராஜேஷ்வர் நாவலாக எழுதியிருந்தார். அந்த நாவல், படமாகிறது. படத்துக்கும் ‘தி லெஜன்ட் ஆப் சந்திரபாபு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
சந்திரபாபு வேடத்தில் நடிக்க பிரபுதேவா உள்பட சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், மறைந்த அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜ், வ.உ.சி. ஆகியோர் வேடங்களிலும் நடிக்க, நட்சத்திர தேர்வு நடக்கிறது.
கே.ராஜேஷ்வர் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன், ரஷ்யா தங்கப்பன், ஆர்.வீ.சுவாமிநாதன் ஆகியோருடன் சேர்ந்து படத்தை தயாரிக்கிறார். நிர்வாக தயாரிப்பு: குட்டி பத்மினி.
கே.ராஜேஷ்வர், பல படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர். அமரன், இதயதாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர்.