கைலா

`கைலா' படத்தில் பேய் பற்றி ஆராயும் லண்டன் மாணவி! படத்தின் முன்னோட்டம்.

Update: 2019-05-11 17:32 GMT
``உலகம் முழுவதும் பேய் என்றால் ஒருவிதமான பயம் இருக்கிறது. ஒரு பெண் எழுத்தாளர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று பயமுறுத்தப்படும் ஒரு பழைய வீடு பூட்டியே கிடக்கிறது. பெண் எழுத்தாளர் அந்த வீட்டை திறந்து தனது ஆராய்ச்சியை தொடங்குகிறார். அப்போது அவர் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

அதில் இருந்து அவர் மீண்டாரா, இல்லையா? என்பதை குலை நடுங்க வைக்கும் திகிலுடன் சொல்கிறோம்'' என்கிறார், `கைலா' என்ற படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து தயாரிக்கும் பாஸ்கர் சீனுவாசன். இவர் மேலும் சொல்கிறார்:-

``இதில், பெண் எழுத்தாளராக தெலுங்கு நடிகை தானா நாயுடு நடிக்கிறார். இவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர். லண்டனில் படிக்கிறார். `கைலா' படத்தில் 45 நாட்கள் நடித்து முடித்துவிட்டு, லண்டன் பறந்து விட்டார். இந்த படத்தில், அன்பாலயா பிரபாகரன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.''

மேலும் செய்திகள்