தோழர் வெங்கடேசன்
30 நாட்களில் உருவான ‘தோழர் வெங்கடேசன்’ படத்தின் முன்னோட்டம்.;
தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகும் புது டைரக்டர்களில் பெரும்பாலானவர்கள், மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துக் கொடுத்து, தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்க வைத்து விடுகிறார்கள். அந்த வரிசையில், ‘தோழர் வெங்கடேசன்’ என்ற படத்தின் டைரக்டர் மகாசிவனும் சேர்ந்து இருக்கிறார். இவர், 30 நாட்களில் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
‘தோழர் வெங்கடேசன்’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-
“நான், டைரக்டர் சுசீந்திரனிடம், ‘நான் மகான் அல்ல,’ ‘ராஜபாட்டை’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறேன். இந்த படத்தின் கதை ஒரு தனி மனிதனுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே நடக்கும் கதை. அதில் ஒரு காதல் ஜோடி எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பதை கதை சித்தரிக்கிறது.
புதுமுகங்கள் ஹரிசங்கர், மோனிகா சின்ன பொட்லா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
காலா பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகியிருக்கிறது. சென்னை, புதுச்சேரி, காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது. படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.”